தரங்கம்பாடி;
திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், திருக்கடை யூரை அடுத்துள்ள தியாகிகளின் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் டி.கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சிம்சன், கலைச்செல்வி, ராசைய்யன், இரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் கொடியை மாவட்டச் செயலாளர் நாகை மாலி ஏற்றி வைத்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வீ.மாரிமுத்து,ஏ.வி முருகையன்,வட்டச்செயலாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர் மாவட்டக்குழு சார்பிலும், விவ சாயிகள், விவசாய தொழிலாளர் சங்க, வாலிபர், மாதர், மாணவர் சங்கங்களின் சார்பிலும், மின் ஊழியர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: