ஐடிஐ, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஓமன் நாட்டிலுள்ள பவுண்டரி ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், டிப்ளமோ/ஐடிஐ டெக்னிசியன்கள் மற்றும் லேபர்களை பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது.

தற்போது, ஓமன் நாட்டிலுள்ள முன்னணி பவுண்டரி ஆலைக்கு, ஐடிஐ, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 22 முதல் 27 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றோர் இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மிகைநேரப் பணி ஊதியத்துடன் சேர்த்து மொத்த மாத ஊதியமாக ரூ. 24 ஆயிரத்து 740/- மற்றும் ஊதிய உயர்வு, இலவச உணவு, இருப்பிடம், மருத்துவக் காப்பீடு, விமான டிக்கெட் ஆகியவை வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், டிரான்ஸ்பர் சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் வெள்ளை நிறப் பிண்ணனியுடன்கூடிய ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 27.1.2018 அல்லது 28.1.2018 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும் முதனிலைத் தேர்விற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044-22505886/22502267/22500417/8220634389 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: