திருப்பூர், ஜன. 18-
திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு டெல்லியில் மர்மமான முறையில் இறந்ததை கண்டித்து புதன்கிழமை மாநகராட்சி அருகில் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கனல்மதி தலைமை வகித்தார். திராவிடர் விடுதலை கழக பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவசாமி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முகமது அஸ்லாம், திராவிடர் கழக வடசென்னை பொறுப்பாளர் செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: