ஈரோடு, ஜன.18-
மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் எம்.என்.காளியண்ணனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதனன்று கீழ்வாணியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து தலைமை வகித்தார். இதில் மேட்டூர் வலதுகரை நீர்பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அந்தியூர் அரசு மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தி உடனடியாக 24 மணி நேர சிகிச்சைப் பிரிவை துவங்க வேண்டும். புதியதாக அரசு கலை கல்லூரியை துவக்க வேண்டும். மலையாளி இன மக்களுக்கு எஸ்.டி. சாதிச்சான்று வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட 100 நாள் வேலையை உடனடியாக வழங்கவ் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.இரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துச்சாமி, பி.பி.பழனிச்சாமி, ஆர்.கோமதி, ஏ.எம்.முனுசாமி, ஆர்.விஜயராகவன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நடராஜன், எம்.அண்ணாதுரை, அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், பவானி தாலுகா செயலாளர் ஏ.ஜெகநான் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் தாலுகா கமிட்டி உறுப்பினர் கே.குருசாமி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: