கோவை, ஜன.18-
கோவையில் சிறுவனின் அறுவை சிகிச்சையின்போது உடலில் துணியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரின் ஐந்து வயது மகன் விஷ்ணு, சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து கோவை ராம்நகரில் உள்ள எஸ்ஆர்ஜி தனியார் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் பின்னரும் சிறுவனுக்கு தொடந்து வலி இருந்த நிலையில், மற்றொரு தனியார் மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்தனர். இதில் உடலில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் துணி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இதனையடுத்து எஸ்ஜிஆர் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த வாரம் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோரிடம் வினோத்குமார் புகார் அளித்தார். இது தொடர்பாக எஸ்ஆர்ஜி தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் தர்மேந்திரா, வினோத், கண்ணதாசன் ஆகியோர் மீது காட்டூர் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: