சென்னை;
நூறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் தங்கள் அணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுமாறு மக்களுக்கான மருத்துவர் அரங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.நாட்டிலேயே முதன் முதலாக 1914ல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இம்மருத்துவர்களின் பல்வேறு நிர்வாக வசதிகளுக்காக மருத்துவக் கழக நிர்வாகக்குழு தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு 7 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மருத்து
வக் கவுன்சிலில் பதிவு செய்து அரசு, தனியார் துறையில் பணியாற்றி வரும் மருத்து வர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜகவின் மோசடித் தனத்தை முறியடித்து மருத்துவத்துறையை பாதுகாக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மத்திய
அரசு ஆட்டி வைக்கும் தலையாட்டி பொம்மைகளாக இருப்பவர்களை ஓரங்கட்டவும், மருத்துவர்களின் உரிமைகளை பாதுகாக்க போராடவும் ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை நடத்துவது அவசியமாகும். இந்த தேர்தலில் போட்டியிடும் மக்களுக்கான மருத்துவர் அரங்கம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், பாரம்பரியமிக்க தமிழக மருத்துவக் கவுன்சில் தற்போது தனித்தன்மை இழந்து, மருத்துவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலும் மாபியா
கும்பலும் இயக்குகிற சுயநலவாதிகளிடமும் சிக்கி மிக மோசமான நிலையில் உள்ளது.இதை முறியடிக்கும் நோக்கத்துடன் மருத்துவர் அரங்க அணி சார்பில் , மருத்துவர்கள் சந்திரசேகர் கோவிந்தசாமி: எண் – 7, காமராஜ் தங்கசாமி: எண்-13, காசி சண்முகம்: எண்-14, மணிவேலன் ராஜாமணிக்கம்: எண் -17,பொன்னம்பலநாதன் அம்மையப்பன்: எண்- 18, ராம்குமார் செல்வராஜ்: எண்- 24, ரெக்ஸ் சற்குணம் சீசில்சத்யகுமார்: எண்-28 ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த அணியை வெற்றிபெறச் செய்ய அனைத்து ஜனநாயக, வெகுஜன அமைப்புகளும் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: