கோவை, ஜன.18-
சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு மனுவை ஏற்பது குறித்தவிசாரணையை வரும் ஜன.29 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை ஈசா மையம் குறித்து அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளையை சேர்ந்த வாசு தேவன் என்பவர் புதனன்று அவதூறு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழகறிஞர் மகேஷ்குமார், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்விற்கு எதிராகவும், நதிகளை இணைப்போம் திட்டம் குறித்தும், ஈசாவின் செயல்பாடுகள் குறித்தும் வேண்டுமென்றே அவதூறான தகவலகளை தெரிவித்து, பரப்பிக்கொண்டு இருப்பதாக முறையிட்டார். இதனையடுத்து ஈசா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த விசாரணையை வரும் ஜன.29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: