கோவை, ஜன.18-
கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் மண்டல புற்றுநோய் மைய கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிசிச்சைபெற்று வருகின்றனர். இச்சூழலில்கோவை அரசு மருத்துவமனையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய
கட்டிடங்கள் கட்டப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் நோயளிகளுக்கான அறைகள் வியாழனன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் தற்போது புதிதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை கோவை அரசு மருத்துவமனையில் 15 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த புதிய அரங்கில் வரும் 25ம் தேதிக்கு பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படும். இந்த அறுவை சிகிச்சை அரங்கில் ஒரே நேரத்தில், சிறுநீரகம் தானம் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மண்டல புற்றுநோய் மையம்
இதேபோல், கோவை அரசு மருத்துவமனையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மண்டல புற்றுநோய் மையம் புதனன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. முன்னதாக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் சிசிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தனிப்பிரிவில் செயல்பட்டு வந்த புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை மையம் 2012 ஆம் ஆண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து மையத்திற்கான புதிய கட்டடம் கட்டவும், உபகரணங்கள் வாங்கவும் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும், மத்திய அணு சக்தி ஆராய்ச்சி மையத்திடம் இருந்து முறையான அனுமதி பெறுவது உள்ளிட்ட காரணங்களால், ஒப்பந்தம் கோருவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு மண்டல புற்றுநோய் மையத்திற்கான கட்டுமானப் பணிக்கள் தொடங்கி 2016 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஏற்கனவே செயல்பட்டு வந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவில் 40 படுக்கை வசதிகள் இருந்தன. தற்போது, ரூ.5 கோடி செலவில் கூடுதலாக 40 படுக்கைகள் கொண்ட மூன்று மாடி புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு, அல்ட்ரா சவுண்ட் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. மேலும், ரூ.15 கோடியில் புற்றுநோய் பாதிப்புகளுக்கான நவீன சிகிச்சை கருவிகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் நவீன கருவியான ரேடியோதெரபி கருவியான “லீனியர் ஆக்ஸ்லேட்டர்’ என்ற கருவி பொருத்த காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் புற்றுநோய் மையத்தை இதுவரை திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது மண்டல புற்றுநோய் மையத்தில் பொருத்தப்பட்ட வேண்டிய லீனியர் ஆக்ஸ்லேட்டர் என்ற நவீன கருவி பொருத்தப்படாமலேயே மண்டல புற்றுநோய்மையம் செயல்பட்டுக்கு வந்துள்ளது. மேலும் லீனியர் ஆக்ஸ்லேட்டர் கருவி பொருத்த 6 மாதம் காலம் ஆகும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதேநேரம்,  வீன உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கான படுக்கை உள்ளிட்டவைகள் இதுவரை வரவழைக்கப்படாத நிலையில் புதனன்று மண்டல புற்றுநோய் மையத்தின் வெறும் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.