திருப்பூர், ஜன. 17-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு உறுப்பினராகவும், தொழிற்சங்க இயக்க முன்னணி தலைவராகவும் இருந்து மறைந்த தோழர் கே.பொன்னுசாமியின் 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் கலந்து கொண்டு அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியம், ஜெயபால், வடக்கு மாநகர செயலாளர் முருகேஷ், மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரன், சிஐடியு மாவட்ட செயலாளார் ரங்கராஜ், சிஐடியு பனியன் சங்க பொது செயலாளர் ஜி.சம்பத், கே.பொன்னுசாமியின் மகன் பி.பாலகுமாரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல், திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகர் பகுதியிலும் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.