தாராபுரம், ஜன 17 –
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளவாய்பட்டினம் மற்றும் தாராபுரத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

தாராபுரம் அடுத்துள்ள தளவாய்பட்டினம் காளியம்மன் கோவில் திடலில் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் தளவாய்பட்டினத்தை சேர்ந்த 29 மாடுகளும், நெய்க்காரபட்டி, உடுமலை, நத்தம், திண்டுக்கல், காரத்தொழுவு பகுதியில் இருந்து 20 மாடுகளும் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் பாதுகாக்கப்பட்ட அரங்கில் மாடுகளை விரட்டி பிடித்தனர். இதில் சிறந்த முறையில் மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல், தாராபுரம் தேவேந்திரர் தெருவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று மாடுகளை பிடித்தனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: