கடலூர்: நெய்வேலி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கொல்லுகாரன்குட்டையில் இயங்கி வருகின்றதும் வள்ளலார் மெட்ரிகுலேஷன் பள்ளி. இந்த பள்ளியின் தலைமை மேலாளருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் தகவல் வந்துள்ளது. இதனையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் தலைமை மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் எஸ்.எம்.எஸ் மூலம் வந்த தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: