சேலம், ஜன.17-
சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது மை வீசிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம், சிபிஐ மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மேச்சேரி மல்லியகுந்தம் பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலை மீது கடந்த ஜன.13 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிவப்பு மை வீசி சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டோரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மேச்சேரி ஒன்றிய செயலாளர் மணிமுத்து தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் அரியா. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில குழு உறுப்பினர் பரமசிவம், முனுசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.