இராமநாதபுரம்,
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று காலை சிறைப் பிடித்துச் சென்றனர்.
நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் குறைவான படகுகள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், இன்று அதிகாலை பாரம்பர்யப் பகுதிகளில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்ப இருந்த நேரத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கலையரசன், சேதுராமன், முனியசாமி மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்றனர்.

இலங்கைக் கடற்பகுதியில் எல்லை தாண்டியதாகக் கூறி, இந்தப் படகுகளிலிருந்த 16 மீனவர்களையும் சிறைப் பிடித்துச் சென்ற இலங்கைக் கடற்படையினர், அவர்களை விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்குக் கொண்டுசென்றுள்ளனர். ஏற்கெனவே, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 159 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: