தீக்கதிர்

மெரினாவில் பொதுமக்கள் குளிக்க தடை

காணும் பொங்கல் திருநாளையொட்டி சென்னை மெரினா கடலில் இறங்கி குளிக்க  பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல்விழாவைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  இதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரைக்கு வரும் குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை மீட்பதற்காக காந்திசிலை, உழைப்பாளர் சிலை ஆகிய இடங்களில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.