தீக்கதிர்

மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

மதுரை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது.

பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்கின்றன.  1,241 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.  சுமார் 1கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.