நாகை,

வேதாரண்யம் அருகே நீச்சல் பயிற்சிக்கு சென்ற 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரத், யுவராஜ், பிரவீன்குமார் உள்ளிட்ட 4 இளைஞர்கள் 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன சிலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.