புதுதில்லி, ஜன. 15-

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு வரக்கூடாது, திரும்பிப் போக வேண்டும் என்று வலியுறுத்தி, நாடுமுழுதும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புதுதில்லியில் ஞாயிறு அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ), எஸ்.யு.சி.ஐ.(சி) முதலான கட்சிகள் கலந்து கொண்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, நாம் பாலஸ்தீனர்களின் பக்கம்தான் இருந்து வந்திருக்கிறோம், இஸ்ரேலின் ஒடுக்குமுறை மற்றும் பாலஸ்தீனத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் விரிவாக்கக் கொள்கைகளை எதிர்த்து வந்திருக்கிறோம் என்றார். கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசிய செயலாளர் து.ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.