சென்னை,
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை அருகே உள்ள ப.சிதம்பரம் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 பேர் சோதனை நடத்திவருகின்றனர். இதையடுத்து, அவரின் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: