மும்பை,
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த சாலை விபத்தில் 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புனேவில் கடேஹான் என்ற இடத்தில் லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் புனேவில் நடந்த மல்யுத்த போட்டியில் பங்கேற்று திரும்பிய 5 மல்யுத்த வீரர்கள் மற்றும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: