மும்பை;
மும்பையில், ஓஎன்ஜிசி-க்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து, விபத்துக்கு உள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் சென்ற 4 பேர் பலியாகியுள்ளனர். 3 பேரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.மும்பையில், ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணற்றின் கசிவை நீக்குவதற்காக, பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டரில்- ஓஎன்ஜிசி ஊழியர்கள் 5 பேர், பைலட்டுகள் 2 பேர்- என சனிக்கிழமையன்று புறப்பட்டனர். ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் கடைசியாக விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் 10.30 மணி வரை தொடர்பில் இருந்தனர். அதன்பிறகு அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டு, காணாமல் போயினர்.

இதுதொடர்பாக கடலோர காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஹெலிகாப்டரின் பாகங்கள் கடல்பகுதியில் சிதறிக் கிடப்பதை கண்டுபிடித்தனர். தீவிரமான தேடுதல் பணிக்குப் பின், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரின் உடல்களையும் கண்டுபிடித்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: