புதுதில்லி;
இந்தியாவில் பல்வேறு துறைகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.436 கோடி முத
லீடு செய்யவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.“இந்தியாவில் சுற்றுலா, தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் ஊக்குவிப்பு போன்ற வற்றுக்காக நான்கு ஆண்டுகாலத் திட்டத்தில் முதலீடு செய்யவுள்ளது. இத்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்த வாரத்தில் இந்தியா வருகை புரியவுள்ளார்” என இஸ்ரேலிய அரசுச் செய்தி தெரிவித்துள்ளது.

“கூடுதலாக இந்தியா – இஸ்ரேல் ஆராய்ச்சி மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப ஊக்குவிப்பு நிதியாக ரூ.254 கோடி ஐந்தாண்டுத் திட்டத்தில் அளிக்க இருதரப்பிலும் ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது” என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணைப் பொது இயக்குநர் கிளாடு கோஹேன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

நான்கு நாள்கள் பயணமாக ஜனவரி 14ஆம் தேதி இந்தியா வரவுள்ள நேதன்யாகுவுடன் சேர்ந்து 130 தொழிலதிபர்களும் வருகை புரியவுள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருகிறார். கடைசியாக 2003ஆம் ஆண்டு அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் இந்தியா வந்திருந்தார்.

Leave A Reply