தமிழகத்தில் குடிசைமாற்று வாரியத்தின் 238 திட்டப்பகுதிகளில் 42 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. சிலவகை நிலங்களை வகைமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது.

விற்பனை பத்திரம் வழங்குவதில் பல சட்டப்பிரச்சனைகள் இருப்பினும், விற்பனை பத்திரம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, அரசுத்துறைகள் தங்களது நிலங்களில் குடியிருப்புகளுக்கான இடத்தை வாரியத்திற்கு நிலமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பணி முடிந்ததும் பணம் செலுத்தி உள்ள அனைவருக்கும் ஒரே அரசாணை மூலம், கிரயப்பத்திரம் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் வெள்ளியன்று (ஜன.12) கேள்வி ரேத்தில் உறுப்பினர் ம.வரலட்சுமி எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு அவர் கூறினார்.

விலை உயர்ந்ததால் உளுத்தம் பருப்பு வழங்கவில்லை: செல்லூர் ராஜூ

சட்டப்பேரவையில் வெள்ளியன்று (ஜன.12) கேள்வி நேரத்தில், சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் மா.சுப்பிரமணியன், ரேசன் கடைகளில் உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறித்து வினா எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, 2013ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு பருப்பிற்கான மானியத்தை நிறுத்திவிட்டது. சந்தையில் விலைகள் உயர்ந்தபோதும் துவரப்பருப்பு வழங்கப்படுகிறது என்றார். அதேசமயம் உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளதை மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.

 

 

Leave a Reply

You must be logged in to post a comment.