சேலம், ஜன. 12-
சேலத்தில் வார்டு மறுவரைறையை கண்டித்து ரேசன் கார்டுகளை சாலையில் வீசி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், சூரமங்கலம் அம்மாசிநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி இதுவரை 23 ஆவது வார்டில் இருந்தது. தற்போது வார்டுவரையறையில் இவர்கள் வசிக்கும் பகுதியை மட்டும் 25 ஆவது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அம்மாசி நகர் மக்கள் தங்களின் ரேசன் கார்டுகளை திருவாக்கவுண்ட்டனூர் புறவழிச் சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாநகர மேற்கு பகுதி செயலாளர் ஜெயமாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் துறையினர் மற்றும் சூரமங்கலம் மண்டல அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் வார்டு மறுவரையறை சம்மந்தமாக குறைகளை கூற அரசு அவகாசம் வழங்கியுள்ளது. ஆகவே, அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: