புதுதில்லி;
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.நீதிபதி லீலா சேத்திற்கு அடுத்து, மூத்த வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் பெண்மணி இந்து மல்கோத்ரா ஆவர்.
இதற்கு முன்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த பெண் வழக்கறிஞரான லீலா சேத், நேரடியாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

கடந்த 35 ஆண்டு காலமாக உச்சநீதிமன்ற வழக்கறிஞராக செயலாற்றி வரும் இந்து மல்கோத்ரா, 1956ல் பெங்களூரில் பிறந்தவர். தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தாக்கல் செய்வதற்கான கடுமையான தேர்வில் முதலாவது இடத்தை பெற்ற வழக்கறிஞர் என்ற பெருமையை 1988ல் பெற்றவர். இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவரை 6 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்துள்ளனர்.

அவர்கள் பாத்திமா பீவி, சுஜாதா வி.மனோகர், ரூமா பால், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா தேசாய் ஆகியோரும் தற்போது நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.பானுமதியும் ஆவர்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜே. பட்டாச்சாரியா, தில்லி
உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்
தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.பி.ராதா கிருஷ்ணன், ஆந்திர உயர் நீதிமன்றத்துக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான அபிலாஷா குமாரி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சூர்யகாந்த் இமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

Leave A Reply