நாமக்கல், ஜன.12-
நாமக்கல் அருகே லாரி ஒட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கு 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. லாரி ஒட்டுநரான இவர் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று ராமநாதபுரத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது, கந்தம்பாளையம் அருகே உள்ள இரும்பு பாலம் என்ற இடத்தில்நள்ளிரவில் லாரியை வழிமறித்த கும்பல் ஒன்று கத்தியை காட்டி மிரட்டி பழனிசாமியின் செல்போன் மற்றும் ரூ.9 ஆயிரத்து 700-ஐ பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

 இதுகுறித்து பழனிசாமி நல்லூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தகாவல்துறையினர், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அருண் என்கிற அருணாசலம் (20), அருண்பாண்டியன்(20), மணிகண்டன் என்ற மணி (20), ஆர்.மணிகண்டன் (20), விக்னேஷ் (20), சக்திவேல் (21), எ.மணிகண்டன் (21) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அருண் என்கிற அருணாசலம், அருண்பாண்டியன், மணிகண்டன் என்ற மணி, ஆர்.மணிகண்டன் ஆகிய 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி பாரி தீர்ப்பு கூறினார். அதேநேரம், விக்னேஷ், சக்திவேல், எ.மணிகண்டன் ஆகிய 3 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.