திருப்பூர், ஜன. 12-
திருப்பூர் தாய்தமிழ் பள்ளியில் பாரம்பரிய நடனத்துடன் பறையடித்து பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாட்டப்பட்டது.

திருப்பூர் வெள்ளியங்காடுஅருகில்உள்ள தாய் தமிழ் பள்ளியில் வெள்ளியன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இதில் பறை இசை, பரதநாட்டியம், சிலம்பாட்டம், கரகாட்டம், கட்டைகால் நடனம் போன்ற பாரம்பரியமான நிகழ்ச்சிகளை மாணவ,மாணவியர்கள் இணைந்து நடத்தினர். மேலும், தமிழரின் பண்பாட்டையொட்டி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகளும் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இயற்கை ஆர்வலர் செந்தமிழன் பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முலம் முளைப்பாரி வளர்க்கப்பட்டும், பொங்கல் வைத்தும் தங்கள் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: