உச்ச நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளில் தங்களுக்கு இருக்கும் அதிருப்தி குறித்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா-வுக்கு எழுதிய கடிதத்தில் நான்கு நீதிபதிகளும் கூறியிருப்பதாவது:

மேதகு தலைமை நீதிபதி அவர்களுக்கு…
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகள், ஒட்டுமொத்தமாக நீதித்துறையின் செயல்பாட்டை பாதித்துள்ளது குறித்து எங்கள் கவலையை தெரிவிக்கவே இந்த கடிதத்தை எழுதியுள்ளோம். இது உயர் நீதிமன்றங்கள் மற்றும் தலைமை நீதிபதி அலுவலக செயல்பாடு நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறோம்.

கொல்கத்தா, மும்பை, சென்னையில் உள்ள உயர் நீதிமன்றங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது முதலே சில நடைமுறைகளையும், மரபுகளையும் பின்பற்றி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் இந்த செயல்பாடுகளால் இந்த நீதிமன்றங்களும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன.

வழக்குகளை பட்டியலிடுவது என்பது, அதன் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வது என்பதும், தேவை ஏற்படும்போது, அமர்வுகள், நீதிமன்றங்களையும் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வதும், அமர்வின் நீதபதிகளை முடிவு செய்வதும், தலைமை நீதியின் தனியுரிமை என்பது மரபாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

வழக்குகளை ஒதுக்கீடு செய்வது என்பது எந்த மேல் அதிகாரிகளின் சட்ட உரிமையாக அங்கீகரிக்கப்படாதபோதும், நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற இந்த வழிமுறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சட்டப்படி நீதிபதிகளில், தலைமை நீதிபதி முதன்மையானவர் ஆவர். ஆனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்களோ அல்லது உயர்வானவர்களோ இல்லை.

வழக்குகளை பட்டியலிடும் நடைமுறை என்பது சரியான முறையிலும், உரிய நேரத்திலும் நடைபெற தலைமை நீதிபதி வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற மரபுகள், நீதிமன்றத்திற்கு கூடுதல் வலிமையை தருவதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் வழக்கின் தன்மை, அதில் தொடர்பான விஷயங்ளை கருத்தில் கொண்டு வழக்குகள்

பட்டியலிடப்படுவதும், அமர்வுகள் முடிவு செய்யப்படுவதும் இருக்க வேண்டும். ஆனால், இது சம்பந்தபட்ட நீதிபதிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பது மிக முக்கியம்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நான்கு பேர் நியமனத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஆர்.பி ருத்ரா தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாகவும், நீதிபதிகள் தேர்வு தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த பரிந்துரைகள் அடிப்படையிலும் நடைமுறைகளை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவு, வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானதாகும்.இதுதொடர்பாக நீங்களும் இடம் பெற்றுள்ள கொலிஜியத்துடன், அரசியல் சாசன அமர்வு கருத்துக்களை கேட்டறிந்தது. இதுதொடர்பாக தலைமை நீதிபதியின் கேள்விக்கு, மத்திய அரசு உரிய பதில் அளிக்க வில்லை. கொலிஜியம் உருவாக்கும் தேர்வு நடைமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

நீதிபதி கர்ணன் தொடர்புடைய தீர்ப்பில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு சில யோசனைகளை தெரிவித்தது. நீதிபதிகள் தேர்வு மற்றும் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இரு நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். தேர்வுக்கான வழிமுறைகளை உருவாக்கும்போது வெளிப்படை தன்மையுடனும், இருக்க வேண்டும்., அரசியல் சாசன அமர்வுடன் மட்டும் விவாதிக்கப்பட வேண்டிய விவரம் அல்ல. அதையம் தாண்டி முழு நீதிமன்றத்திற்கும் இந்த விவகாரங்கள் தெரிய வேண்டியது அவசியம்.

எனவே இந்த விவகாரம் 27.10.2017 தங்களுடைய உத்தரவினை தொடர்ந்து மத்திய அரசால் எழுப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மீக உரிமையும் தங்களுக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அது அமையும் என எதிர்பார்ககிறோம்.
இப்படிக்கு,                                                                                                                                                   நீதிபதி ஜே. செலமேஸ்வர்,
நீதிபதி ரஞ்சன் கோகாய்,
நீதிபதி மதன் பி லோகுர்,
நீதிபதி குரியன் ஜோசப்.

Leave A Reply