திருப்பூர், ஜன. 12-
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் டெங்கு விழிப்ப்பணர்வு, மரம் நடுதல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும், மரம் நடும் அவசியம் குறித்து சேயூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி, சுவாமிநாதன், ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் குப்புசாமி ஆகியோர் விளக்கி 40க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். மேலும், சிக்கண்ணா கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலர் சின்னசாமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் குப்புசாமி, சண்முகசுந்தரம் மற்றும் கதர் வாரிய முன்னாள் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply