வெலிங்டன்;                                                                                                                                                                               ஜூனியர் உலக கோப்பை என அழைக்கப்படும் 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் நடத்தப்படுகிறது.16 அணிகள் பங்கேற்கும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கி பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரிவுகள்;
‘ஏ’ பிரிவில் கென்யா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்அணிகளும்,‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வேஅணிகளும்,‘சி’ பிரிவில் வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, நமிபியா அணிகளும்,‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.இந்திய ஜூனியர் அணி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் சிறப்பான பயிற்சயில் களம் இறங்குகிறது. மூன்று முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வரும் செவ்வாய் கிழமையன்று(16-ந்தேதி) எதிர்கொள்கிறது.

இந்திய அணி வீரர்கள்;
ப்ரித்வி ஷா (சி), ஷுப்மான் கில், மஞ்சோத் கல்ரா, ஹிமான்ஷு ராணா,அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், ஹார்விக் தேசாய், சிவம் மவி, கமலேஷ் நாகர்கோட்டி, இஷான் போரேல், அனுக்குல் சுதாகர் ராய், சிவா சிங், ஆர்யான் ஜுயல், அர்ஷ்தீப் சிங், பங்கஜ் யாதவ்முதல்நாளான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்…! 4 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா- ஜிம்பாப்வே, வங்காளதேசம்-நமிபியா, நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.முக்கியமான நாடுகள் மோதும் மட்டுமே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.