மும்பை;
சில்லரை நாணய உற்பத்தியை இந்திய அரசு கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் நிறுத்தியுள்ளது.சில்லரை நாணயங்கள் தயாரிக்க நொய்டா, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் நான்கு நாணய தயாரிப்பு கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கூடங்களில் ஜனவரி 8ஆம் தேதி முதல் நாணய உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நாணய உற்பத்தியைக் நிறுத்தக் கூறி உற்பத்திக் கூடங்களுக்கு அனுப்பப்பட்ட பொது மேலாளரின் கடிதத்தையடுத்து நாணய உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு சேமிப்புக் கிடங்குகள் நிரம்பி யுள்ளதால் புதிதாக அச்சடிக்கப்படும் நாண யங்களைச் சேமித்து வைக்க இடமில்லை என்பதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சேமிப்புக் கிடங்குகளில் 2,500 மில்லியன் நாணயங்கள் ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நாணய உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தற்போது போதுமான அளவுக்குச் சில்லரை நாணயங்கள் புழக்கத்திலும், கையிருப்பிலும் உள்ளது. சில்லரை நாணயங்களுக்கான தட்டுப்பாடு ஏதும் இல்லை. அரசுப் பொது மேலாளர் தான் இந்த ஆலைகளை இயக்கி வருகிறார்” என்றார்.இருப்பினும் தயாரிப்புக் கூடங்களின் பணியை முடங்கச் செய்யாமல், சேமப்புக் கிடங்குகளில் உள்ள நாணயங்களை உடனடியாக ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ள அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று நாணய தயாரிப்புக் கூடங்களின் யூனியன்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: