“ விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை

யானையின் காலில்
யானை விழுந்ததாய்
தகவல் இல்லை

பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை

கரடிக்கு மான்கள்
கால்பிடித்து விட்டதில்லை

ஒன்று
சுதந்திரத்தின் வானம்

இல்லை
மரணத்தின் பள்ளம்

இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்ல.”

– வைரமுத்து

Leave a Reply

You must be logged in to post a comment.