திருப்பூர், ஜன. 11-
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கருவம்பாளையம் பகுதியில் மங்கலம் சாலை குறுகியதாகவும், வீடுகள், கடைகள் அதிகமாக உள்ள நெருக்கடிமிக்க பகுதியாகும். அந்த பகுதியில் உயர்மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் செல்கிறது. இந்நிலையில் வியாழனன்று திடீரென உயர்மின் அழுத்த கம்பிகள் அந்த சாலையில் அறுந்து விழுந்தது. அச்சமயம் சாலையில் வாகனங்கள் செல்லாததால் அசம்பாவிதம் ஏதுவும் நிகழவில்லை. எனினும், இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.