அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் நிபந்தனையை அரசு ஏற்றால் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை செய்வோம் என்று சிஐடியு பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 8 வது நாளாக நடைபெற்று வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள் மக்களின் சிரமங்களை கணக்கில் கொண்டு வேலை நிறுத்ததை திரும்ப பெற வேண்டும். அது குறித்து தொழிற்சங்கங்கள் கூடி பேசி இன்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுமக்களின் சிரமங்களை கணக்கில் கொண்டு, தொழிற்சங்கங்கள் கீழ் கண்ட முடிவுக்கு வருகிறது.   அதில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சமரச பேச்சு வரத்தை நடத்த வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை பேசி தீர்வு காண்பது. அதுவும் 3 மாத காலத்திற்குள் இந்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். வேலை நிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. இதற்கு அரசு உடன்பட்டால் வேலை நிறுத்தத்தை கைவிட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நீதிபதி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் இந்த சமரச தீர்விற்கு உடன்படுகிறீர்களா என கேட்டனர். அதற்கு அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் அரசிடம் கேட்டு மதியம் 2.15 மணிக்கு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.

Leave A Reply