திருப்பூர், ஜன.11 –
திருப்பூரில் மருத்துவரை தாக்கியதாக 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூர் அருகில் பி.எம்.ஆர்த்தோ என்ற எலும்பு முறிவு மருத்துவமனையை நடத்தி வருபவர் மருத்துவர் பாலமுருகன். இவருடைய மருத்துவமனையையொட்டி 15 வேலம்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மருத்துவமனைக்கு வருபவர்கள் வாகனங்களை ராஜமாணிக்கத்தின் கடைக்கு முன்பாக நிறுத்துவதாகவும், கடையின் முன்பு சிறுநீர் கழிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாலமுருகனுக்கும், ராஜமாணிக்கத்திற்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை மருத்துவமனையின்முன்பு நின்று கொண்டிருந்த பாலமுருகனின் கார் ஓட்டுநர் அன்பரசுக்கும், ராஜமாணிக்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம், அவருடைய மகன் செந்தில்குமார், அவருடைய உறவினர் வெங்கட்ராமன் ஆகியோர் சேர்ந்துஅன்பரசை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதை பார்த்து அங்கு வந்த மருத்துவர் பாலமுருகனையும் தாக்கிய
தாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாலமுருகன், அன்பரசு ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மருத்துவர் பாலமுருகன் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவருடைய புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

தலைமறைவாகஉள்ள வெங்கட்ராமனை தேடி வருகின்றனர். ராஜமாணிக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் பாலமுருகன் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: