கோவை, ஜன. 11-
மாநிலம் தழுவிய அளவில் ஜன 25.ல் நடைபெறும் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக்கிட மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் மற்றும் சாலை பாதுகர்ப்பு மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜன.25 ஆம் தேதி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குவது குறித்த ஆயத்த மாநாடு புதனன்று கோவையில் எச்எம்எஸ் தலைவர் வீராச்சாமி தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். எல்பிஎப்ரத்தினவேல், சிஐடியு தலைவர்சி.பத்மநாபன், மாவட்ட செயலாளர் (பொ) கிருஷ்ணமூர்த்தி, ஐஎன்டியுசி சீனிவாசன் பாலசுந்தரம், எம்எல்எப் சார்பில் பழனியப்பன், ஏஐடியுசி ஆர்.ஏ.கோவிந்தராஜன், ஏஐடிசிசிடியு என்.கே.நடராஜன் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தின் அவசியம் குறித்து உரையாற்றினர்.

இதில் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்கும் வகையில் ஆலைவாயில் கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் உள்ளிட்ட பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது. நிறைவாக ஏஐடியுசி தங்கவேல் நன்றி கூறினார்.

நாமக்கல்”:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.மணிவேல், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன், ஐஎன்டியுசி கே.பழனிவேல், எல்பிஎப் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கே.ஆர்.குமாரசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.தனசேகரன், சிஐடியுமாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் எஸ்.அருள் ஆறுமுகம், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் எல்பிஎப்மாவட்ட கவுன்சில் பொதுச்செயலாளர் கபாடி.ச.பழனியப்பன் cஏஐடியுசி கட்டுமான தொழிற்சங்க மாநில பொதுசெயலாளர் எம்.முனுசாமி, ஐஎன்டியுசி மாநில கௌரவ தலைவர் எஸ்.கே.பழனியப்பன், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, எச்எம்எஸ் மாநில செயலாளர் பி.கணேசன், ஏஐசிசிடியு மாநில செயலாளர் ஏ.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்குவது என சூளுரைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.