விருதுநகர்,

சிவகாசியில் இன்று பட்டாசு தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை – மதுரை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு, சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவரக் கோரி சிவகாசியில் பட்டாசு தொழிலாளா்கள், மற்றும் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருகின்ற 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இது தொடா்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சிவகாசியில் 17-வது நாளாக நீடிக்கும் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். இன்று சிவகாசியை அடுத்த திருத்தங்கல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் திருத்தங்கல் வந்தபோது அந்த ரயிலை தொழிலாளா்கள் மறித்தனா். தகவல் அறிந்த காவல்துறையினா் உடனடியாக வந்து ரயிலை மீட்டு அனுப்பி வைத்தனா். இருப்பினும் தொழிலாளா்கள் ரயில் நிலையத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Leave a Reply

You must be logged in to post a comment.