திருப்பூர், ஜன.11 –
கேரளாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் பல்லடத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

ஜப்பான் ஷோடோகன் கராத்தே கழகம் சார்பில் சர்வதேச கராத்தே போட்டிகள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று கேரள மாநிலத்தில் நடைபெற்றது.இதில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, குவைத், கத்தார் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் மேற்கு பல்லடம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர் ராமானுஜநம்பி 11வயது கட்டா பிரிவில் வெள்ளி மற்றும் குழு கட்டா பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதேபள்ளியைச் சேர்ந்த அருந்ததி, 12 வயதிற்கு உட்பட்ட 30 கிலோ குமித்தோ போட்டியிலும், மிதுன் 9 வயதிற்கு உட்பட்ட 25 கிலோ குமித்தோ போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

மேலும், பல்லடம் அண்ணாநகர் அரசு நடுநிலைப் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவர் கே.தமிழரசன் 9 – 10 வயதிற்குட்பட்ட 25 கிலோ குமித்தோ, கட்டா மற்றும் குழுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கராத்தே பயற்சியாளர் சரவணன் பாராட்டுத் தெரிவித்தார். தங்கப் பதக்கம் வென்ற கே.தமிழரசனின் தந்தை குப்புசாமி, கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் சிஐடியு திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: