மதுரை, ஜன.11 –
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசியதாவது:

சாமானிய மக்கள் மீது அக்கறை இல்லாத அரசுகளாக மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் உள்ளன. மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்து கிறது. மத்திய பாஜக அரசின் கொள்கையால் சிறு உற்பத்தி யாளர்களும் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு வர்த்தகர்களை ஒழித்துவிட்டு, பெரும் மால்களை உருவாக்கு வதே பாஜக அரசின் கொள்கை யாக உள்ளது. இந்தியாவில் உற்பத்தி குறைந்து, படித்த வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறு உற்பத்தியாளர்கள், சிறுவியாபாரிகளுக்காக அவர்கள் அங்கம் வகிக்கிற கட்சிகள் போராட வில்லை. ஆனால் அவர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்துகிறது.

 

வங்கிகளும் திவால்; மக்களும் திவால்:
இந்திய வங்கிகள் வராக்கட னில் சிக்கியுள்ளன. பெரும் முத லாளிகள் வாங்கிய கடன் ரூ.12 லட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பவரவில்லை. வங்கிகளால் புதிய கடன்களை வழங்க முடிய வில்லை. இதனால் வங்கிகள் திவால் நிலையில் சிக்கியுள்ளன. விவசாயிகள், மாணவர்கள், வர்த்த கர்களிடம் விரட்டி விரட்டி கடனை வசூலிக்கும் வங்கிகள், பெரும் முதலாளிகளிடமிருந்து கடனை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வங்கிகளுக்கு உதவி செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. வங்கிகள் திவாலாகும் போது அதிலுள்ள மக்கள் பணமும் திவால்தான் என்று அறிவிப்பதை நோக்கி மோடி அரசின் நட வடிக்கை உள்ளது.

திரைப்பட நடிகர்கள் கொள்கைகளை அறிவிக்காமல் தங்களது பெயர்களை மட்டுமே அறிவித்து, அரசியலில் ஈடுபடுகின்றனர். தமிழ கத்தில் பாஜக நேரடியாக காலூன்ற முடியாமல் வேறு வகையில் முயற்சிக்கிறது. அதற்காக மாரீச மானை உருவாக்கியுள்ளனர். அந்த மாரீசமான்தான் ஆன்மீகம். அதை த்தான் ஆன்மீக அரசியல் என்று ரஜினி அறிவித்துள்ளார். ஆன்மீகம் மனிதர்களை பிரிக்கக் கூடாது.
பாஜக மக்களை, சாதிரீதியாக, மதரீதியாக பிரிக்கிறது. என்ன எழுதவேண்டும்; என்ன எழுதக்கூடாது என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள். பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங் களில் உள்ள இந்துக்கள் மத்தி யில் ஒருவகை திருமண உறவு முறை உள்ளது. தமிழகத்தில் உள்ள இந்துக்கள் மத்தியில் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திருமண முறை உள்ளது. கேரள மாநிலத்தில் தாய்மாமன் பெயரையே தங்களுடைய இன்ஷியலாக போட்டுக்கொள்கிறார்கள். இது தாய்வழிச்சமூகத்தின் வழியில் வந்தது. இதனை பாஜக மத்திய அமைச்சர் ஒருவரிடம் கூறிய போது, ‘அப்படியா’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். இப்படி இந்தியாவை பற்றித் தெரியாதவர் கள்தான் அமைச்சர்களாக உள்ளனர். இந்து மதத்திலேயே ஒற்றுமையை உருவாக்க முடி யாதவர்கள்தான், முஸ்லிம்களுக்கு முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

தமிழகத்தைப் பற்றியும் தமிழகபொருளாதாரத்தைப் பற்றியும் தெரியாதவர்கள்தான் நீதிபதிகளாக உள்ளனர். தமிழக பொரு ளாதாரத்தில் பொதுத்துறையில் உள்ள போக்குவரத்துத்துறையின் பங்கு அதிகம். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தமிழக அரசு வழங்காததால்தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாபம் இல்லாததால் போக்குவரத்துத்துறையை தனியார்மய மாக்க நீதிபதி யோசனை கூறுகிறார். காவல்நிலையங்களும் மருத்துவ மனைகளும் நீதிமன்றங்களும் லாபத்தில் இயங்குகிறதா? இவையெல்லாம் மக்களுக்கு சேவை செய்கின்ற துறைகள். நீதிமன்றத் தில் தேங்கியுள்ள லட்சம் வழக்கு களை விரைந்து முடிப்பது குறித்துநீதிபதிகளும் சிபிஐயும் யோசிப்பார்களா?  இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.