திருப்பூர், ஜன. 11 –
திருப்பூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை அறிவித்திருப்பதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டது.

திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவை பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தாராபுரம் சாலை தலைமை மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப் போவதாக மருத்துமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் இப்பிரிவு மாற்றப்படாமல் தொடர்ந்து பழைய இடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை முதல் இப்பிரிவை மாற்றப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.சரவணன் உள்பட கட்சி அணியினர் புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்றனர். அங்கு மருத்துவமனையை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து பதாகை வைத்தனர். மேலும், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்களிடமும் இதுகுறித்து துண்டறிக்கைகள் வழங்கினர். இதைப் பெற்றுக் கொண்ட நோயாளிகள் பலர் மருத்துவமனையை இங்கிருந்து மாற்றக் கூடாது. இதுதான் போக்குவரத்துக்கு வசதியான இடமாக இருக்கிறது. இதை மாற்றினால் நாங்கள் மிகவும் சிரமப்படுவோம் என்று ஆமோதித்து கருத்துத் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: