ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் இயங்கி வந்த அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இயங்கி வரும் அடுக்குமாடி வணிக வளாகத்தில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், கேளிக்கை விடுதி, திருமணத்திடல் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்நிலையில் வியாழனன்று இந்த வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வணிக வளாகத்தை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனத்தில் வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலக்கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.