ஈரோடு, ஜன.10-
ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை புதனன்று மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கான வாக்காளர் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்டார். இதில் ஈரோடு (கிழக்கு) தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 119 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் மூவர் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 154 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஈரோடு (மேற்கு) தொகுதியில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 269 ஆண்வாக்காளர்களும், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 485 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 774வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

மொடக்குறிச்சி தொகுதியில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 223 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 150 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 401 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 661 ஆண் வாக்காளர்களும், ஒரு
லட்சத்து 8 ஆயிரத்து 172 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 834 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், பவானி தொகுதியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 596 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 554 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 150 வாக்காளர்களும், அந்தியூரில் தொகுதியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 800 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 508 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 312 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கோபி செட்டிபாளையம் தொகுதியில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 946ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து24 ஆயிரத்து 576 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 528 வாக்காளர்களும், பவானிசாகர் (தனி) தொகுதியில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 486 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 10 பெண்வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலித்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 499 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். இதன்படி மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும் மொத்தம் 9 லட்சத்து 2 ஆயிரத்து 100 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 35 ஆயிரத்து 487 பெண் வாக்காளர்களும்,65 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 18 லட்சத்து 37 ஆயிரத்து652 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சேலம்
சேலத்தில் இறுதி வாக்காளர் பட்டிலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ரா.பாஜிபாகரே வெளியிட்டார். இதில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 91 ஆண்கள், 14 லட்சத்து 14 ஆயிரத்து 530 பெண்கள், 97 திருநங்கைகள் என ஒட்டுமொத்தமாக 28 லட்சத்து 31 ஆயிரத்து 718 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை:
கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். இந்த சுருக்க திருத்தம் மூலம் 30 ஆயிரத்து 493 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 62 ஆயிரத்து ,459 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 14 லட்சத்து2 ஆயிரத்து 986 ஆண் வாக்காளர்கள், 14 லட்சத்து 26 ஆயிரத்து 298 பெண் வாக்காளர்கள் மற்றும் 286 மூன்றாம் பாலினத்தவர் என 28 லட்சத்து 29 ஆயிரத்து 570 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தாராபுரம் தனி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20  ஆயிரத்து 959 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 694 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும், காங்கயம் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 709 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 21 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

அவிநாசி தனி தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 336 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 30 ஆயிரத்து 496 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேரும், திருப்பூர் வடக்கில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 419 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 65 ஆயிரத்து 393 பேரும், மூன்றாம் பாலித்தனவர் 84 பேரும் இடம் பெற்றுள்ளனர். திருப்பூர் தெற்கில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 401 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 543 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 28 பேரும், பல்லடத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 556 ஆண்களும், 1 லட்சத்து 72 ஆயிரத்து 77 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 40 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

உடுமலையில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 564 ஆண் வாக்காளர்களும், 1லட்சத்து 28 ஆயிரத்து 642 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேரும், மடத்துக்குளத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 189 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 67 ஆயிரத்து 9 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 18 பேரும் இடம்பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 79 ஆயிரத்து 633 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 84 ஆயிரத்து 723 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் மொத்தமாக 243 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்திலுள்ள இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரத்து 93 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 95 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், 116 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 13  லட்சத்து 62 ஆயிரத்து 36 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 978 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 89 ஆயிரத்து 552 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என ஒட்டு மொத்தமாக 5 லட்சத்து 61 ஆயிரத்து 53 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.