மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.8 ஆக பதிவானது. இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு கரீபியன் கடற்பகுதியில்  நடுக்கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கியூபா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு இரவு நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், கரீபியன் கடலில்  சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply