திருப்பூர், ஜன. 10 –
ரேசன் கடைகளில் பொருட்களை முறையாக வழங்கவும், ஸ்மார்ட் கார்டு குளறுபடிகளைக் களையவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஜனவரி 8ஆம் தேதி சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினத்தன்று குடிமங்கலம் ஒன்றியம் கள்ளப்பாளையம், குடிமங்கலம், பெதப்பம்பட்டி, அணிக்கடவு ஆகிய நான்கு இடங்களில் ரேசன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு எம்.சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா, மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரங்கநாதன், கமிட்டி உறுப்பினர்கள் ஏ.தங்கவடி வேலன், ஆர்.லட்சுமணசாமி, எஸ்.மோகனசுந்தரம், ஆர்.ஓம்பிரகாஷ், வி.தம்புராஜ், சி.ஜெ.ஸ்ரீதர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

இதேபோல், அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழங்கரை ஊராட்சி அவிநாசிலிங்கம் பாளையம் ரேசன்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பி.தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முத்துசாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.பழனிச்சாமி, ஏ.ராஜன், கிளை செயலாளர்கள் எஸ்.மணி, எஸ்.விஜயக்குமார் மற்றும் திரளான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பெருமாநல்லூரில் உள்ள நியாயவிலைக் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சீனிவாசன் தலைமை வகித்தார். கமிட்டி உறுப்பினர் கருப்பசாமி, வி.பி.சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், வடக்கு ஒன்றியக்குழு சார்பில் கணக்கம் பாளையம், காளிபாளையம், எஸ்எஸ்.நகர், வீதிக்காடு காளம்பாளையம், பள்ளிபாளையம், கருக்கன்காட்டுப்புதூர் உள்ளிட்ட இடங்களில் உணவு உரிமையைப் பாதுகாக்கவும், சர்க்கரை விலை உயர்வைக் கைவிடவும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.