ஈரோடு, ஜன.10-
ஈரோட்டில் வழக்கமான பயணக் கட்டணத்தை விட பன்மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததனியார் பேருந்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தனியார் பேருந்துகள் அனைத்தும் அனுமதிக்கப்படாத பல்வேறு வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியில் இருந்து ஈரோடு வருவதற்கு வழக்கமாக ரூ.15 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஏபிஎஸ் என்ற தனியார் பேருந்தில் பயணிகளிடம் ரூ.50 கட்டணம் வசூல் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து நியாயம் கேட்ட சிலரை பேருந்தின் நடத்துநர் கிழே இறக்கி விட்டுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் அமைதியாகப் பயணம் செய்துள்ளனர்.

இதன்பின் பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வந்தடைந்தவுடன், அதில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சம்மந்தப்பட்ட தனியார் பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ஓட்டுனர், நடத்துனரை எச்சரித்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து பயணிகளின் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.