கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே ஓடும் பேருந்தில் உயிரிழந்த பயணியையும் அவரது நண்பரையும் தற்காலிக பணியாளர்கள் நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து திருக்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் திருக்கோவிலை சேர்ந்த வீரண்ணன் மற்றும் அவரது நண்பரும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து ஓசூர் அடுத்த சூளகிரி என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது வீரண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை அறிந்த தற்காலிக அரசு பேருந்து பணியாளர்கள் வீரண்ணன் உடலுடன் அவரது நண்பரையும் நடுவழியில் கிழே இறக்கிவிட்டு அவர்களது பயணச்சீட்டை பிடுங்கி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடந்த நீண்ட நேரமாகியும் எந்த உதவியும் கிடைக்காமல் வீரண்ணன் உடலுடன் அவரது நண்பர் தத்தளித்து வந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து வீரண்ணன் உடலை ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட அமரர் ஊர்தி மூலம் ஏற்றி செல்லப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: