ஈரோடு, ஜன.10-
ஈரோடு மாவட்ட சிபிஎம் மாநாட்டின் அறைகூவல்படி ஈரோடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

ஈரோடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்பில் உள்ள மக்களுக்கு அரசு மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று சூரம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு நகரச் செயலாளர் சுந்தராஜன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, எஸ்.சுப்பிரமணியன், ஆர்.விஜயராகவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் மாவட்டகுழு உறுப்பினர்கள உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல், சத்தியமங்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் திருத்தணிகாசலம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பெரும் திரளானோர்கள் பங்கேற்றனர்.பவானி அந்தியூர் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் எ.ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்முத்துசாமி, சிஐடியு தாலுகா தலைவர் டி.ரவீந்திரன், வி.தொ.ச தாலுகா தலைவர் எஸ்மாணிக்கம். மாவட்ட குழு உறுப்பினர் வி.நடராசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: