விருதுநகர்,
விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்தும் டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி பிரதீப் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அருப்புக்கோட்டை அருகே வந்தபோது ஓட்டுநர் சித்திரைச்சாமியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து , எதிரே ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மீது அதிவேகமாக மோதிக் கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் பேருந்தின் பின்சக்கரங்கள் தனியாக கழன்றது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து மற்றும் டிராக்டரில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தனியார் பேருந்தின் ஓட்டுனரின் அதிவேகமாக பேருந்தை இயக்கியதும் அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையடுத்து காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply