சென்னை,
ஊதிய உயர்வு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்வரை அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என்று சிஐடியு தலைவர் அ.சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு  போக்குவரத்து  தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.750 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார். இதனை ஏற்று பணிக்கு திரும்பும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து  சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும்   அறிவிக்கப்படவில்லை. ஊதிய மாற்று காரணி குறித்து எதுவும் கூறாமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்து இருப்பது ஏமாற்று வேலையாகும். இதனை ஏற்க இயலாது எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: