====ஐ.வி.நாகராஜன்=====
உலகநாடுகள் தங்களின் ஜிடிபி அளவில் சராசரியாக 6 சதவீதத்தை மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவெறும் 1.4 சதவீத தொகையை மட்டுமே செலவு செய்து வருகிறதுஎ ன உலக வங்கி கூறியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த 1.4 சதவீத தொகையும் முழுமையாக மக்கள் நலனுக்குசெல்கிறதாஎன்றால் அதுவும் சந்தேகமே என்று தெரிவித்துள்ளது. இன்றைய சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு தனி இடம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுவதற்கு முக்கியகாரணம் இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களிடத்தில் இருக்கும் திறமையும் அறிவு சார்ந்த தொழில் நுட்பமும்தான்.மேலும் இந்தியாவில் 90சதவீத தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப பணிகள் உழைக்கும் மக்களை நம்பி மட்டுமே செய்யப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மக்களின் சுகாதாரத்தைக் காக்க வேண்டியது மத்தியஅரசின் பிரதானகடமையாகும். சர்வதேச நாடுகளில் மக்களின் சுகாதாரசெலவுகள் குறித்த ஒரு ஆய்வை உலக வங்கி செய்துள்ளது. இதில் உலகநாடுகள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி அளவுகளில் 6 சதவீதத்தை செலவு செய்கிறது. இந்தியாவில் மட்டும் கடந்த 2014ஆம் ஆண்டில் வெறும் 1.4 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மத்தியநிதி அமைச்சகம் செய்த 2015-16ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வில் மக்களின் சுகாதாரத்திற்கு மத்தியஅரசு 2014-ம் ஆண்டைவிட மிகவும் குறைவாகஅதாவது 1.3 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரேசில் கூட மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த 3.8 சதவீதம் செலவு செய்துள்ளது. இந்தியாவைவிடபொருளாதாரத்திலும் மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் பெரியநாடானசீனா 3.1 சதவீதம் செலவுசெய்துள்ளது. ரஷ்யா 3.7 சதவீதம் செலவு செய்து தனது நாட்டுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவிற்குகீழ் இந்தோனேஷியா 1.1 சதவீதம் வங்கதேசம் 0.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தற்போதைய நிலையில் இந்திய மக்களின் சுகாதாரத்தைமேம்படுத்த 2015ஆம் ஆண்டின் ஜிடிபிஅளவில் 5.2 சதவீதம் வரைசெலவுசெய்யவேண்டும் என ஆக்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.உலகசுகாதார அமைப்பு உலகிலேயே தொற்று நோய்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவது இந்திய மக்கள் தான் என தெரிவித்துள்ளது. இந்தியாவும் இந்தியமக்களும் தற்போதுமிகவும் மோசமான சுகாதார நிலையில் உள்ளனர் என்பது இந்தியபிரதமர் மோடிக்கு தெரியாதாஎன்ன? இந்திய மாநிலங்களின் நோய் பாதிப்பு ஆபத்து காரணிகள் குறித்துவிரிவானமுதல் ஆய்வறிக்கையை மத்தியசுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைசமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை இந்திய மருத்துவ ஆய்வுகவுன்சில், இந்திய பொதுசுகாதார அறக்கட்டளை, சுகாதாரமதிப்பீடுமையம் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தமிழகம் சார்ந்ததகவல்கள் நெஞ்சை பதறவைக்கிறது.

1990ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு நிலவரங்களை ஒப்பிட்டு அனைத்து மாநிலங்களின் ஆரோக்கிய சூழலை ஆய்வு செய்துள்ளனர். இந்தஆய்வறிக்கையின் விபரங்கள் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக ஆரோக்கிய நிலவரம் குறித்து ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிபரங்களை இங்கே கவனிப்போம்.
தமிழகத்தில் நோய் பாதிப்புஆபத்துகாரணிகள் குறித்து ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள

ஒப்பீடுபட்டியல்
வ.எண் நோய் காரணி (சதவீதத்தில்) 1990ல்     2016ல்
1. ஊட்டச்சத்துகுறைபாடு                        33.9            14.1
2. அசுத்ததண்ணீர்ஃதுப்புரவு                    12                1.8
3. காற்றுமாசு                                              10.1               6.2
4. புகையிலைபொருட்கள்                        5                  5.6
5. உயர்ரத்தஅழுத்தம்                               3.9                  6.9
6. தவறானஉணவுமுறை                        3.7                 5.6
7. தொழில் சார்ந்தவை                           2.3                  3.2
8. மது,போதைபொருட்கள்                    1.9                  4.2
9. ரத்தத்தில் அதிககுளுக்கோஸ்        1.8                   4.7
10. அதிககொழுப்பு                                  1.4                    2.8
11. அதிகஉடல் பருமன்                           0.8                   3.8

தமிழகத்தில் ஆண்கள்,பெண்களின் சராசரி ஆயுள் காலம் அதிகரித்துள்ளது. 1990 ஆண்டுகளின் சராசரிஆயுட்காலம் 59.4 ஆண்டுகளாகவும்,பெண்களின் சராசரிஆயுட்காலம் 61.9 ஆண்டுகளாகவும் இருந்துள்ளது. 2016ல் ஆண்களின் சராசரிஆயுட்காலம் 68.9 ஆண்டுகளாவும் பெண்களின் சராசரிஆயுட்காலம் 73.5 ஆண்டுகளாகவும் அதிகரித்துள்ளது. 1990ல் நோய் பாதிப்புஆபத்துகாரணிகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஊட்டசத்துகுறைப்பாடு, அசுத்தமானதண்ணீர், மோசமானதுப்புரவுப்பணி,கைகளை சுத்தமாக வைத்திருக்காததன்மை, காற்றுமாசுஆகியவை இடம்பெற்றுள்ளன.2016ல் இந்தபட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஊட்டசத்துகுறைபாடு, உயர்ரத்தஅழுத்தம், காற்றுமாசு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் தவறான உணவு பழக்கத்தால் ஆரோக்கிய குறைபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. அதோடு மனநலஅலட்சியத்தால் மது போதை பழக்கங்களும்,உயர்ரத்த அழுத்த பாதிப்பும் அதிகரித்துள்ளதாகஆய்வில் தெரியவந்துள்ளது. 

1990ல் இறப்புக்கு காரணமான நோய் பிறகாரணங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் வயிற்றுப்போக்கு,சுவாசம் சார்ந்த தொற்று பாதிப்புகள்,பிறவிக்குறைபாடு ஆகியவை இடம்பெற்றுள்ளது. 2016-ல் இந்தபட்டியலின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இதயநோய், நீரிழிவு, தற்கொலை, உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை இடம் பெற்றுள்ளதாக மேற்கண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கை தமிழகத்திற்கு வழங்கியிருக்கும் ஆரோக்கியம் குறித்த எச்சரிக்கையை அறிவுரையாகநாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகமக்களின் ஆரோக்கியத்தை தவறான உணவு முறைகளும், மனநல பாதுகாப்பிலுள்ள அலட்சியமுமே கடுமையாக பாதிக்க தொடங்கியிருக்கிறது என்பதை உள்வாங்க வேண்டும். எனவே உணவுமுறை மற்றும் மனநலபாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்தால் நம் உயிரையும் இழக்கும் அபாயத்தை சந்திக்க நேரிடும். இதில் மத்திய மாநிலஅரசுகள் உரியகவனம் செலுத்தி அதிகரித்து வரும் ஆரோக்கிய குறைபாடுகளைக் களைந்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: