திருச்செங்கோடு. ஜன. 9-
100 நாள் வேலை திட்டத்தில் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி சித்தாளந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சித்தாளந்தூர் பகுதியில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிப்பிட வசதியினை ஏற்படுத்திட வேண்டும். ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.போயர் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முறையாக குடிநீர் விநியோகித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று சித்தாளந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கே.கதிர்வேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராணன் ஆர்ப்பாடத்ததை தொடக்கி வைத்துப் பேசினார்.

ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், நகர செயலாளர் ஜ.ராயப்பன், நகரக் குழு உறுப்பினர் எஸ்.தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். முடிவில், ஒன்றியக் குழு உறுப்பினர் கே.எம்.சீனிவாசன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.